Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

13 மாதங்களில் 33 துப்பாக்கிகளை வாங்கிய பட்டொக்! நூற்றுக்கு மேற்பட்ட எப். பி. ஐ புலனாய்வாளர்கள் விசாரணை

In உலகம்
Updated: 16:48 GMT, Oct 5, 2017 | Published: 16:48 GMT, Oct 5, 2017 |
0 Comments
3138
This post was written by : Sivaguru Siva

லாஸ் வேகாஸ் துப்பாக்கிசூட்டு சம்பத்தின் கொலையாளி ஸ்ரிபன் பட்டொக் கடந்த 13 மாதங்களில் 33 துப்பாக்கிகளை கொள்வனவு செய்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் நவீன வரலாற்றில் இது ஒரு மிக மோசமான  சம்பவம் என்பதால் ஸ்ரிபன் பட்டொக் ஏன் இதனை செய்தார் என்பதற்கு விடை காண்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் கடந்த 4 நாட்களாக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரிபன் பட்டொக் இரண்டு முறை மணஞ் செய்தவர் பின்னர் இரண்டு முறை விவாகரத்து செய்தவர். முன்றாவதாக தற்போதைய காதலியான மரிலோ டான்லி கிடைத்தார்.

ஸ்ரிபன் பட்டொக் அநேக நாட்களில் இரவிரவாக சூதாடி பகலில் தூக்கும் குணம் கொண்டவர். தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் கூட சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

தனது தாக்குதலை முடித்ததும் தப்பிச்செல்லும் எண்ணம் அவரிடமிருந்ததாக காவற்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg