Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிலம்பம் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா!

In இலங்கை
Published: 06:39 GMT, Oct 6, 2017 |
0 Comments
1183
icon_com
This post was written by : Ravivarman
D (5)

தெற்காசிய சிலம்பம் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், மேற்படி நிகழ்வு நுவரெலியா புதிய நகர மண்டபத்தின் உள்ளக அரங்கில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இந்நிகழ்வின் விசேட அதிதியாக முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவுத் மற்றும் முன்னாள் அமைச்சரும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் சர்வதேச சிலம்பம் சம்மேளனத்தின் செயலாளர் செல்வராஜ், தென்னிந்திய திரைப்படத்துறையின் ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பாண்டியன், இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் கந்தசாமி நாயுடு, செயலாளர் திவாகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி போட்டிகளில் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து 72 போட்டியாளர்களும், இலங்கை சார்பாக 70 போட்டியாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

D (4) D (3) D (2) D (1) C (1) B (1) A (3) A (2) 0

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg