Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டன் யாழ்ப்பாண வறுவல்

In
Updated: 08:10 GMT, Oct 6, 2017 | Published: 07:29 GMT, Oct 6, 2017 |
0 Comments
1853
icon_com
This post was written by : Anojkiyan
varu

மட்டன் – 500 கிராம்

சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 50 கிராம்
மல்லி தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

பட்டை – ஒன்று
கிராம்பு – ஒன்று
சோம்பு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி

அரைக்க:

மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
சோம்பு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
கசகசா – ஒரு தேக்கரண்டி
இஞ்சி – சிறிது
பூடு – 8 பற்கள்

வறுத்து தூள் செய்ய:

மிளகாய் – 10
சீரகம் – அரை தேக்கரண்டி
சோம்பு – அரை தேக்கரண்டி
பட்டை – ஒன்று
ஏலக்காய் – ஒன்று

செய்முறை

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கறியுடன் சேர்த்துப் பிசறி வைக்கவும். பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு, வறுத்துத் தூள் செய்ய வேண்டிய பொருட்களை வறுத்துத் தூள் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் ஆகியவற்றைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றுடன் பிசறி வைத்திருக்கும் கறிக் கலவையைச் சேர்க்கவும். பிறகு உப்பு, மல்லி தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கறியில் உள்ள நீர் வற்றியவுடன் தூள் செய்தவற்றைச் சேர்த்து தீயைக் குறைத்து வைத்து 10 நிமிடங்கள் கிளறி இறக்கவும். சுவையான மட்டன் யாழ்ப்பாண வறுவல் தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg