Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெங்காயத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா?

In
Published: 08:35 GMT, Oct 6, 2017 |
0 Comments
1282
icon_com
This post was written by : Anojkiyan
onion_625x350_51440401096

நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் வெங்காயத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

டொன்ஸில், இரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை, கொலஸ்ட்ரால் ஆகிய நோய்களை தீர்க்க சக்தி வெங்காயத்திற்கு உள்ளது.

இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. வெங்காயத்தை தயிர், மோர், நெய் போன்ற மற்ற உணவுப் பொருட்களோடு சேர்த்துச் சாப்பிடும்போது, உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும் குணம்கொண்டது. வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, கல்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நீர்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும். முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் உள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது. வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg