Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சசிகலா வெளியே வருகிறார்

In இந்தியா
Updated: 16:57 GMT, Oct 6, 2017 | Published: 08:07 GMT, Oct 6, 2017 |
0 Comments
1434
icon_com
This post was written by : elayathambi
sasi

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் வி.கே.சசிகலாவிற்கான  பிணை மனு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  5 நாள் நிபந்தனைப் பிணையில் வெளிவரும்  சசிகலா உடல் நலப் பாதிப்பில் இருக்கும்  அவரது கணவர் நடராஜனைப் பார்க்கவிருக்கிறார். வெளியே வரும் சசிகலாவால் தமிழக அரசியலில் என்ன பரபரப்புகள் ஏற்படலாம் என்பது பற்றிய ஊகங்கள் பரவ ஆரம்பித்துள்ளன.

சசிகலாவால் முதலில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை  நிராகரிக்கப்பட்டதை அடுத்து சசிகலா தரப்பினர் தேவையான ஆவணங்களோடு மீண்டும் மனுவை கையளித்திருந்தனர். இம் மனுவின் ஆதாரமான ஆவணங்கள் தமிழகம் சார்ந்தவை என்ற அடிப்படையில் இவை அனைத்தும் தமிழக காவல்துறையினரிடம் அக்ரஹாரா சிறை அதிகாரிகள் கையளித்தனர்.

அவற்றைச் சரிபார்த்த பொலிசார் சசிகலாவிற்கான பிணைக்கு மறுப்பில்லை என தெரிவித்ததை அடுத்து சசிகலாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.  இன்று மாலை அல்லது நாளை அவர் வெளிவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg