Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காந்தியைக் கொன்றது யார்? குழப்பத்தில் இருக்கும் உச்ச நீதிமன்றம்!!

In இந்தியா
Updated: 10:19 GMT, Oct 6, 2017 | Published: 09:20 GMT, Oct 6, 2017 |
0 Comments
1772
icon_com
This post was written by : elayathambi
gandhi-murder

இந்திய தேசியத் தந்தையான மகாத்மா காந்தியின் கொலை வழக்கு மீண்டும் இந்திய நீதிமன்றிற்கு வந்திருக்கிறது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 இல் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நாதுராம் கோட்சேயும், நாராயண் ஆப்தேயும்  அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் தூக்கில் இடப்பட்டனர்.

காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவரின் உடலில் நான்கு குண்டுகள் பாய்ந்திருந்தன. காந்தியைச் சுட்டுக் கொன்றதாக தூக்கில் இடப்பட்ட கோட்சேயிடம் இருந்த கைத்துப்பாக்கியில் இருந்து மூன்று குண்டுகளே பாய்ந்திருந்தன. அப்படியானால் அந்த நான்காவது குண்டு யாருடையது என்ற கேள்வி எழுந்துள்ளது.

காந்தியின் கொலை வழக்கை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற மனுவை டாக்டர் பக்கஜ் பத்னிஸ் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார். காந்தியின் உயிரைப் பறித்தது கோட்சேயின் குண்டுகள் அல்ல, அந்த நான்காவது குண்டாகவும் இருக்கலாம் என்கிறார் இவர். டாக்டர் பக்கஜ் பத்னிஸ் மும்பையைச் சேர்ந்த ‘அபினவ் பாரத்’ என்ற அமைப்பின் அறங்காவலர் ஆவார். இவர் தாக்கல் செய்த  மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

காந்தி கொலை பற்றி ஆராய 1966 இல் அமைக்கப்பட்ட நீதிபதி கே.எல் கபூர் ஆணையமும் இந்த நான்காவது குண்டு தொடர்பான உண்மையை வெளிக் கொண்டு வரவில்லை. இந்த மர்மத்தை கண்டறிய வேண்டும் என்று டாக்டர் பக்கஜ் பத்னிஸின் மனு கோரி நிற்கிறது.

இந்த நிலையில் காந்தி கொல்லப்பட்டு 69 ஆண்டுகளின் பின்னர் இந்த வழக்கு விசாரணை தேவைதானா என்று உச்ச நீதிமன்றம் சிந்திக்கிறது. இந்த மனுவை தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்துவது உகந்ததா என்று கண்டறிந்து சொல்வதற்காக மூத்த வழக்கறிஞர் அமரேந்தர் சரணை உச்ச நீதிமன்றம் தற்போது நியமித்திருக்கிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg