Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதுவித வளங்களும் இல்லாத நிலையில் தேசிய சாதனை புரிந்துள்ளோம்: ஜனார்த்தனா

In இலங்கை
Updated: 09:49 GMT, Oct 6, 2017 | Published: 09:37 GMT, Oct 6, 2017 |
0 Comments
1439
icon_com
This post was written by : Ravivarman
DSC04303

எந்தவித வளங்களும் இல்லாத நிலையில் நாங்கள் தேசிய சாதனை புரிந்துள்ளோம் என மட்டக்களப்ப பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலத்தின் கபடி அணியின் தலைவி செல்வி ஜனார்த்தனா தெரிவித்தார்.

இது குறித்து நேற்றையதினம் (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய 17வயது பெண்கள் அணியினர் தேசிய மட்ட கபடிப்போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கொழும்பில் நடைபெற்ற பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்திற்கும், பண்டதரிப்பு ஜெசிந்தா மகா வித்தியாலயத்திற்கும் இடையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 30 – 23 எனும் புள்ளி அடிப்படையில் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய அணி வெற்றிபெற்று தேசிய சம்பியன் அணியாக தெரிவுசெய்யப்பட்டது.

தேசிய அணியாக வெற்றிபெற்று கிழக்கு மாகாணத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள அணி வீரர்களை வரவேற்கும் வகையில் பழுகாமம் மக்களினால் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் மாபெரும் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

பழுகாமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள்,பாடசாலை சமூகம்,அரசியல்வாதிகள் இணைந்து இந்த வரவேற்பினை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வாகனப்பேரணியாக வெற்றிபெற்ற வீராங்கனைகள் மட்டக்களப்பில் இருந்து பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் வரையில் அழைத்துச் செல்லப்பட்டதுடன் கிராமங்கள் தோறும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய கபடி அணி தேசிய ரீதியில் சாதனை படைப்பதற்கு உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் இருந்து செயற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களாக இ.புவேந்திரகுமார்(புவி) மற்றும் கி.கிருஷ்ணராஜன் ஆகியோருக்கும் பாடசாலை அதிபர் சு.உதயகுமார் ஆகியோரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

DSC04322 DSC04315 DSC04292 DSC04283 DSC04272

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg