Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மோட்டார் சைக்கிள் வாங்கினால்! ஆடு இலவசம்!!

In இந்தியா
Updated: 12:02 GMT, Oct 6, 2017 | Published: 11:57 GMT, Oct 6, 2017 |
0 Comments
2046
icon_com
This post was written by : elayathambi
Diwali-goat-offer-6_10

மிக விநோதமான பண்டிகைகால விற்பனைச் சலுகை ஒன்றை தமிழக மோட்டார் சைக்கிள் விற்பனை முகவர் நிலையம் ஒன்று அறிவித்துள்ளது.

காயத்ரி மோட்டார்ஸ் என்ற மோட்டார் சைக்கிள் முகவர் நிறுவனம் முன் வைத்திருக்கும் சலுகையில் ஒரு மோட்டார் சைக்கிள் வாங்குபவருக்கு ஒரு ஆடு இலவசமாக தரப்படும் என்று விளம்பரம் செய்திருக்கிறது. பண்டிகைக் காலத்தில் மிகத் தட்டுப்பாடாக இருக்கும் ஆடுகளை, தமது விற்பனை அதிகரிப்பிற்காக முகவர் நிலையம் முன் வைத்திருக்கிறது.

buy-bike-get-free-goat_Rushlane

ஹீரோ மோட்டார் சைக்கிள் முகவர்களான இந்த காயத்ரி மோட்டார்ஸ் தம்மோடு போட்டியிடும் ஹொண்டா முனவைக்கும் சலுகைக்குப் போட்டியாக இதை அறிவித்திருக்கிறது.

ஹொண்டா மோட்டார் சைக்கிளை தீபாவளிப் பண்டிகையில் ஒருவர் வாங்கினால்,ஷோபா செற் ஒன்றை தருவதாக ஹீரோ முகவர் அறிவித்திருக்கிறார். இன்  நிலையில், இவர்கள் பதில் சலுகையாக  ஆட்டை முன் வைத்திருக்கிறார்கள்.

புதன்கிழமை இந்த சலுகையை தாம் அறிவித்தை அடுத்து நூற்றுக் கணக்கானவர்கள் வாங்க முன்வந்திருப்பதாகவும், குறுகிய காலத்தில் தேவையான ஆடுகளை பெற்றுக் கொள்வதில் தமக்குச்  சிரமம் இருப்பதாகவும் காயத்ரி மோட்டார்ஸ் உரிமையாளர் வெங்கடசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு  சிவகங்கை மாவட்டத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் அவதரித்த இளையான்குடியில்தான் இந்தக் கூத்து நடக்கிறது. கொல்லாமையை சொல்லும் சைவமும் ஆடுகளும் பாவப்பட்டவை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg