Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சென்னையில் சசிகலாவுக்கு தொண்டர்கள் வரவேற்பு

In இந்தியா
Updated: 16:56 GMT, Oct 6, 2017 | Published: 16:49 GMT, Oct 6, 2017 |
0 Comments
2008
icon_com
This post was written by : Sivaguru Siva
Sasikala_2_EPS

பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து இன்று 5 நாட்களுக்கு பரோல் எனப்படும் நிபந்தனை விடுதலையைப் பெற்ற  அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா இன்றிரவு சென்னையை சென்றடைந்தார். அவருக்கு மலர் தூவியும், வாழ்த்து கோஷம் எழுப்பியும் தொண்டர்கள் பலமான வரவேற்பு அளித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை சந்திப்பதற்காக சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை நிபந்தனை விடுதலை வழங்கியது.

இதனையடுத்து சிறையிலிருந்து இன்று மாலை வெளியேறிய சசிகலா வாகனத்தில் சென்னைக்குப்பயணித்தார்

ஊடகங்களிடம் அவர் சிக்காமல் இருப்பதற்குரிய முன்னேற்பாடுகளை தொண்டர்கள் செய்தனர்

ஒசூர், வேலூர் வழியாக பயணித்த அவர் இரவு 8.20 மணியளவில் சென்னை சென்றடைந்த சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலா தங்க உள்ள தியாகநகரிலுள்ள இளவரசி வீட்டை சுற்றிலும் தொண்டர்கள் குவிந்தனர்.

Master

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg