Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை: விஜயகாந்

In இந்தியா
Updated: 04:46 GMT, Oct 7, 2017 | Published: 04:38 GMT, Oct 7, 2017 |
0 Comments
1234
This post was written by : Vithushagan

கட்சியை பற்றியோ, நிர்வாகிகளை பற்றியோ சமூக வலைத்தளத்தில் விமர்சிப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும், சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்றவற்றில் தலைமை கழகத்தை பற்றியோ, கட்சி நிர்வாகிகளை பற்றியோ, தனிப்பட்ட நபரை பற்றியோ, விமர்சனம், கிண்டல் செய்வதை நமது கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

எனவே சமூக வலைத்தளங்களில் இதையும் மீறி பதிவு இடுபவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள். அதே போன்று தனித்தனியாக பேஸ்புக்கில் குழுக்களாக அமைத்து செயல்படுவதையும் தவிர்க்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg