Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய விமானப்படையின் உலங்கு வானூர்தி விபத்து: விசாரணைக்கு உத்தரவு

In இந்தியா
Updated: 05:02 GMT, Oct 7, 2017 | Published: 05:02 GMT, Oct 7, 2017 |
0 Comments
1181
This post was written by : Vithushagan

அருணாசல பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கியதில் 7 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகளை விரைவாக நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 6.00 மணியளவில் அருணாசலப் பிரதேசம் டாவாங் மாவட்டத்தில் வழமை போன்று பயிற்சியில் ஈடுபட்ட குறித்த உலங்கு வானூர்தி, திடீரென சுனா பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது தரையில் வீழ்ந்து நொறுங்கியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து பாதுகாப்பு படையினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) விமானப்படை தினம் கொண்டாட இருக்கும் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து விமானப்படையினருக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விமானப்படை உலங்கு வானூர்தி,மற்றும் ராணுவ விமானங்கள் சமீப காலமாக விபத்தில் சிக்குவது குறித்து விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா நேற்று முன்தினம் கவலை வெளியிட்டு இருந்தார்.

அமைதி காலங்களில் ஏற்படும் இதுபோன்ற இழப்புகள் கவலையை ஏற்படுத்துவதாகவும், இவற்றை குறைக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த சூழலில் மீண்டும் ஒரு விமானப்படை உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg