Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: 600 தடவைகள் அத்துமீறி தாக்குதல்!

In இந்தியா
Updated: 05:36 GMT, Oct 7, 2017 | Published: 05:36 GMT, Oct 7, 2017 |
0 Comments
1286
This post was written by : Vithushagan

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடப்பாண்டில் இதுவரை பாகிஸ்தான் இராணுவம் 600 தடவைகள் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவானது பாகிஸ்தான் உடன் சுமார் 33 ஆயிரம் கி.மீ அளவுக்கு சர்வதேச எல்லையை கொண்டுள்ளது. இதில், காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் 221 கி.மீ சர்வதேச எல்லை மற்றும் 740 கி.மீ அளவுக்கான எல்லை கட்டுப்பாடு கோடு உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு சமீப காலமாக பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாத இறுதி வரை 600ற்கும் அதிகமான முறை பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் ரக குண்டுகள் மூலம் இந்திய பகுதிகளை தாக்கியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் தாக்குதலில் 8 பொதுமக்கள் மற்றும் 16 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2016ஆம் ஆண்டில் 450 முறை பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்கியதாகவும், அதில் 18 பொதுமக்கள் மற்றும் அதிகளவான பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg