Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உத்தரப்பிரதேசம் சரயூ ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு!

In இந்தியா
Updated: 06:52 GMT, Oct 7, 2017 | Published: 06:52 GMT, Oct 7, 2017 |
0 Comments
1273
This post was written by : Vithushagan

உத்தரப்பிரதேசம் மாநிலம் பக்ரெய்ச் மாவட்டத்தில் சரயூ ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பக்ரெய்ச் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 12 பேருடன் , சரயூ ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு  கவிழ்ந்ததில்  படகில்  பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர் .

விபத்து தொடர்பாக மீட்புக் குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து நீரில் மூழ்கியவர்களில் 6 பேரின் உடலை மீட்புப் படையினர் மீட்டனர். மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg