Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொன்னதைச் செய்துகாட்டிய ஆரவ்!

In சினிமா
Updated: 14:07 GMT, Oct 7, 2017 | Published: 14:07 GMT, Oct 7, 2017 |
0 Comments
2292
This post was written by : Ravivarman

பிக்பொஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற ஆரவ், ஆதரவற்ற குழந்தைகளுக்குத் தனது பரிசு தொகையைக் கொடுத்து, சொன்னதைச் செய்து காட்டியுள்ளார்.

போட்டி நடைப்பெறும் பொழுது, தான் வெற்றி பெற்றால், பரிசுத் தொகையின் ஒரு பகுதியை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையிலேயே ஆரவ் தனது பரிசுத் தொகையில் 5 லட்சம் ரூபாயை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார்.

நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் முடிந்து, ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதில் வெற்றி பெறும் வெற்றியாளருக்கு 50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதில் வருமான வரியினைக் கழித்து 35 லட்சம் ஆரவுக்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg