Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கௌதம் கார்த்திக்குடன் இணையும் வரலட்சுமி!

In சினிமா
Updated: 14:23 GMT, Oct 7, 2017 | Published: 14:23 GMT, Oct 7, 2017 |
0 Comments
1436
This post was written by : Ravivarman

கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்தில் தற்போது வரலட்சுமியும் இணைந்துள்ளார்.

இயக்குனர் திரு இயக்கும் ஒரு திரைப்படத்தில் தந்தை கார்த்திக், மகன் கௌதம் கார்த்திக் ஆகியோர் முதன்முறையாக ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தில் இருவரும் அப்பா – மகனாகவே நடிக்கின்றனர். கௌதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா நடிக்கும் இந்நிலையில் இன்னொரு கதாநாயகியாக நடிகை வரலட்சுமியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தில் வரலட்சுமி கதாநாயகியாக நடிக்க வந்தது குறித்து இயக்குனர் திரு கூறுகையில், ‘நான் இயக்கிய முதல் படமான ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ சமயத்தில் இருந்தே வரலட்சுமியை எனக்குத் தெரியும்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைக்காக இயக்கம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார். நேரில் அவர் என்ன கேரக்டரோ, அதேதான் இந்தப் படத்திலும். கதையை எழுதும்போதே அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். கதையைக் கேட்டதும் உடனே சம்மதித்து விட்டார்” என இயக்குனர் திரு தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg