Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தளத்தில் கஞ்சா மீட்பு!

In இலங்கை
Updated: 15:40 GMT, Oct 7, 2017 | Published: 15:40 GMT, Oct 7, 2017 |
0 Comments
1318
This post was written by : Ravivarman

புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உச்சிமுனை மீனவர் வாடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

உச்சிமுனைப் பகுதியில் கேரளக் கஞ்சா புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி விஜயபாகு கடற்படையினருக்கும், கல்பிட்டி பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை குறித்த பகுதியை சுற்றிவளைத்த கல்பிட்டி பொலிஸார் மீனவர் வாடிப் பகுதியில் மூன்று உரைப் பைகளில் பொதியிடப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த கேரளக் கஞ்சாவை மீட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது மூன்று உரைப் பைகளிலும் 81 கிலோ 868 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்த கல்பிட்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Kirla 02 Kirla 01

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg