Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பங்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைய முயன்றவர் கைது

In
Published: 08:59 GMT, Oct 8, 2017 |
0 Comments
1211
icon_com
This post was written by : Suganthini
uk

லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைய முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவர் பொலிஸாரால் நேற்று (சனிக்கிழமை) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரண்மனையின் முன்பக்க நுழைவாயில் வழியாக அரண்மனைக்குள் நுழைய இவர் முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

30 வயதுடைய இந்தச் சந்தேக நபரை, மத்திய லண்டனிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இது பயங்கரவாதச் சம்பவத்துடன் தொடர்புடையது இல்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, கடந்த ஓகஸ்ட் மாதம் பக்கிங்ஹாம் அரண்மனையை அண்டியுள்ள பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய குற்றச்சாட்டின் பேரில் 26 வயதுடைய இளைஞர் ஒருவரை, பொலிஸார் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg