Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான பலாக்காய் புளிக்குழம்பு

In
Updated: 10:03 GMT, Oct 8, 2017 | Published: 10:03 GMT, Oct 8, 2017 |
0 Comments
1438
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள்

பிஞ்சு பலாக்காய் (பெரியது) – ஒன்று
வெங்காயம் – 2
பூண்டு – 6 பல்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – பெரிய எலுமிச்சை அளவு
தேங்காய் (சிறியது) – ஒன்று (துருவி வைக்கவும்)
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க:

தேங்காய் துருவல் – அரை கப்
பூண்டு – 5 பல்
சோம்பு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கொத்து

தாளிக்க:

கடுகு – அரை தேக்கரண்டி
சோம்பு – அரை தேக்கரண்டி
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி

செய்முறை

பலாக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை கெட்டியாகக் கரைத்து வைக்கவும். தேங்காயை அரைத்து முக்கால் கப் முதல் பாலும், 2 கப் இரண்டாம் பாலும் எடுத்துக் கொள்ளவும். வறுத்து அரைக்க வேண்டியவற்றை சிவக்க வறுத்து, ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பலாக்காய் துண்டுகளுடன் தூள் வகைகள், புளிக்கரைசல் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு குலுக்கிவிட்டுக் கலந்து உப்பு சரிபார்த்துக் கொள்ளவும். பிறகு அதனை குக்கரில் போட்டு இரண்டாம் தேங்காய்ப் பாலை ஊற்றி 3 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வதக்கவும். வதங்கியதும் வேக வைத்த பலாக்காயைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும். குழம்பில் எண்ணெய் தெளிந்து வந்ததும், தேங்காய் விழுது மற்றும் முதல் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான பலாக்காய் புளிக்குழம்பு தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg