Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்தரங்கு!

In இலங்கை
Updated: 16:49 GMT, Oct 8, 2017 | Published: 16:49 GMT, Oct 8, 2017 |
0 Comments
1355
This post was written by : Ravivarman

புதிய அரசியலமைப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழ் ஈழ விடுதலை இயக்க உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா விருந்தினர் விடுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இக்கருத்தரங்கில் புதிய அரசியலமைப்பபில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழருடைய விடயங்கள், முஸ்லிம்களிற்கான விடயங்கள், புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட காணி, பொலிஸ் தொடர்பான விடயங்கள், வடக்கு கிழக்கு இணைப்பு, போன்ற பல்வேறு கருத்தாடல்கள் நடைபெற்றன.

குறித்த கருத்தரங்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சிற்றம்பலம், எஸ்.கந்தசாமி (சட்டத்தரணி), இ.தம்பையா (சட்டத்தரணி), என். சிறிகாந்தா (ரெலோ அமைப்பின் செயலாளர்) ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன்,வடமாகாண சபை சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா, கருணாகரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

IMG_6796 - Copy IMG_6784

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg