Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விசா சேவைகளை இடைநிறுத்தியுள்ள துருக்கி, அமெரிக்கா

In உலகம்
Published: 06:33 GMT, Oct 9, 2017 |
0 Comments
1189
icon_com
This post was written by : Suganthini
turkey

பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தங்களது விசா சேவைகளை இடைநிறுத்தி வைப்பதற்கு இந்த இரு நாடுகளும் தீர்மானம் எடுத்துள்ளன.

துருக்கியிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் அமெரிக்காவிலுள்ள துருக்கியத் தூதரகமும் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், குடியேற்ற விசா அல்லாத அனைத்து விசா  சேவைகளும் இடைநிறுத்தி வைக்கப்படுவதாக இந்த இரு நாடுகளும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளன.

துருக்கியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றிவரும் அதிகாரி ஒருவர் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டார். துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு மேற்கொள்வதற்கு முற்பட்டதாகக் கூறப்படும் மதகுரு ஒருவருடன் குறித்த தூதரக அதிகாரி தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, இந்த இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரு நாடுகளும் தங்களது விசா சேவைகளை இடைநிறுத்தி வைப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளன.

மேலும்,  துருக்கியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரம் மற்றும் அதன் ஊழியர்களின் பாதுகாப்புத் தொடர்பில் துருக்கிய அரசாங்கம்  உறுதிமொழி அளித்திருந்ததாகவும் இது  தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் துருக்கிய இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்தச் செயற்பாடானது, நேட்டோ தலைமையிலான நட்பு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்ளும் சமீபத்திய அறிகுறியாகத் தென்படுவதாகவும் கூறப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg