Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கின்றது அரசு: ஸ்டாலின் கண்டனம்

In இந்தியா
Updated: 09:10 GMT, Oct 9, 2017 | Published: 09:10 GMT, Oct 9, 2017 |
0 Comments
1208
This post was written by : Kemasiya

இஸ்லாமிய மக்களின் ஹஜ் புனிதப் பயணத்திற்கு அளிக்கப்படும் மாணியத்தை இரத்து செய்ய மத்திய அரசு எடுக்கும் நடிவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதனூடாக மத்திய அரசு அவர்களின் உரிமையை பறிக்கின்றது என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மாணியத்தை இரத்து செய்வது, இஸ்லாமியர்களின் கடமையை பறிப்பதற்கு சமம் என்றும் தி.மு.க.செயல் தலைவர் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஹஜ் புனித பயணத்திற்கான மாணியத்தை ரத்து செய்வது மட்டுமின்றி, ஹஜ் பயணிகள் சவுதி அரேபியாவிற்கு புறப்பட்டுச் செல்வதற்காக இருந்த 21 இடங்களை ஒன்பதாக குறைத்திருப்பது, முற்றிலும் இஸ்லாமிய மக்களின் மத சுதந்திரத்தில் குறுக்கிடும் போக்காக அமைந்திருக்கின்றது.

ஆகவே ஹஜ் புனித பயணத்திற்கு அளிக்கப்பட்டு வரும் மாணியத்தை ரத்து செய்யும் உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏற்றுக்கொள்ளக்கூடாது கூடாது. அனைவரையும் அரவணைத்துச் சென்று, வேற்றுமையில் ஒற்றுமை காணும் வகையில் பணியாற்ற வேண்டிய பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ளது.

இஸ்லாமிய பெருமக்களின் ஹஜ் புனித பயணத்திற்கு மாணியம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யப்பட வேண்டும்” எனவும், குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg