Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூப்பரான முட்டை மிதிவெடி

In
Updated: 11:39 GMT, Nov 29, 2017 | Published: 09:57 GMT, Nov 29, 2017 |
0 Comments
2639
icon_com
This post was written by : Anojkiyan
medi

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 500 கிராம்
பச்சைமிளகாய் – 2
முட்டை – 5
தேங்காய்ப் பால் – கால் கப்
வெங்காயம் – ஒன்று
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
இஞ்சி விழுது – அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – ஒரு மேசைக்கரண்டி
பூண்டு – 2 பற்கள்
உப்பு – சுவைக்கு ஏற்ப
ஸ்ப்ரிங் ரோல் ஷீட்ஸ் – 20
ரஸ்க் தூள் – ஒரு கப்
எண்ணெய் – பொரிக்க

செய்முறை

தேவையானவற்றை அனைத்தையும் தயார்படுத்தி எடுத்து வைக்கவும். 5 முட்டைகளை மட்டும் அவித்து, ஓடு நீக்கி இரண்டாக வெட்டி வைக்கவும். கிழங்கை, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து தோலுரித்து துண்டுகளாக்கி வைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையை அரிந்து வைக்கவும். பூண்டை சிறிதாக நறுக்கி வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி அனைத்தையும் சேர்த்து வதக்கவும். ஓரளவு வதங்கியதும் உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து தூள் வாசனை போக வதக்கி வேக விடவும்.

உருளைக்கிழங்குத் துண்டுகளை சேர்த்து, அரைக் கோப்பை தண்ணீர் ஊற்றி சில நிமிடங்கள் வேக விட்டு, பாலைச் சேர்க்கவும். இறுதியாக எலுமிச்சை சேர்த்துக் கலந்து மேலும் சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டை வெண்கருவை அடித்து வைக்கவும். அகலமான ஒரு தட்டில் ரஸ்க் தூளைப் பரப்பி வைக்கவும். இரண்டு ரோல் ஷீட்களை ஒன்றாக வைத்து, அதன் நடுவே பாதி முட்டையையும் சிறிது கிழங்குக் கலவையை வைக்கவும். நீள்சதுரமாக வரக்கூடியதாக மடித்து, ஓரங்களை அடித்து வைத்த முட்டையைத் தடவி ஒட்டி விடவும். அனைத்து மிதிவெடிகளையும் ஒன்றாகத் தயார் செய்து வைக்கவும். ஒவ்வொன்றாக முட்டையில் நனைத்து ரஸ்க் தூளில் புரட்டி எடுக்கவும். பாத்திரத்தில்; ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, தயார் செய்து வைத்துள்ள மிதிவெடிகளை மிதமான தீயில், ஆறு புறமும் திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்கவும். பின்னர் சுவையான மிதிவெடி தயார்!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg