Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீர் பகுதிகளில் பெண்களின் முடியை வெட்டும் கும்பல் : தொடரும் அதிர்ச்சி

In இந்தியா
Updated: 11:03 GMT, Oct 9, 2017 | Published: 11:03 GMT, Oct 9, 2017 |
0 Comments
1347
This post was written by : Kemasiya

காஷ்மீர் முழுதும் பெண்களின் முடியை வெட்டும் சம்பவம் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதை கண்டித்து, கடையடைப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக ஜம்மு-காஷ்மீரை அண்டிய பகுதிகளில், திடீர் திடீரென இனந்தெரியாத கும்பலினால் பெண்களின் தலைமுடிகள் வெட்டப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) காஷ்மீர் பகுதி முழுதும் கடையடைப்பு போராட்டம் இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவத்தை மேற்கொள்ளும் கும்பலை “பாண்ரொம் பார்பர்” (Phantom Barber) கும்பல் என மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இவர்கள் யார் என்பது இது வரை தெரியவில்லை எனவும், இவ்வாறு முடியை வெட்டும் 40 சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்திற்குள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மேலும் காஷ்மீர் உட்பட, புதுடெல்லி மற்றும் அதை அண்டிய பகுதிகளான ஹரியானா, ராஜஸ்தான், ஆகிய பகுதிகளிலும் குறித்த சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg