Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜல்லிக்கட்டு சரித்திரம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படமாகிறது

In சினிமா
Published: 17:32 GMT, Oct 10, 2017 |
0 Comments
1467
icon_com
This post was written by : Surenth
Jallikattu

‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017′ என்ற திரைப்படத்தின் படப்படிப்புகள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றதாக அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்பை முன்னெடுக்கும் முதல் இந்தியத் திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017′ என திரைப்படத்தை இயக்கும் அஹிம்சா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்தோஷ் இயக்குகிவரும் இந்த திரைப்படம், தமிழகத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான எழுச்சியையும், அது தொடர்பான போராட்டங்களையும் மையமாக கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நூற்றாண்டுகளாக ஜோன் எஃப் கென்னடி, அல் கோர், பராக் ஒபாமா உள்ளிட்ட பல ஆளுமைகள் கொண்டவர்களை உருவாக்கிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்புக்கள் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, இந்திய திரையுலக நட்சத்திரம் உலக நாயகன் கமல் ஹாசன் உரையாற்றிய இடத்தில் படப்பிடிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டதாக படக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த திரைப்படம் தொடர்பான கதையை கருவை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழுவிடம் வழங்கியதையடுத்து, கருவை பாராட்டி பல்கலைக்கழகம் உடனடியாக படப்பிடிப்புக்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_0229 IMG_0232 IMG_0245 IMG_0246 IMG_0251 IMG_0253 IMG_0254 IMG_0255 IMG_0257

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg