Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பரோல் முடிந்தது! – மீண்டும் சிறைக்கு சசிகலா

In இந்தியா
Published: 04:26 GMT, Oct 11, 2017 |
0 Comments
1522
icon_com
This post was written by : Puvanes
sasikala001

அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு வழங்கப்பட்ட பரோல் இன்றுடன் நிறைவடைகின்றது. இதனால் நாளை மாலை 5 மணிக்குள் அவர் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் சசிகலா அடைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் அவருடைய கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, கணவரை பார்க்க 5 நாள் பரோல் வேண்டும் என்ற கோரிக்கையை சிறைத்துறை அதிகாரிகளிடம் சசிகலா முன்வைத்தார்.

சசிகலாவின் பரோல் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிறைத்துறை அதிகாரிகள், பரோல் காலத்தில் சசிகலா எந்தவிதமான அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையுடன் கடந்த 6 ஆம் திகதி பரோல் வழங்கினர்.

அதன்படி இன்றுடன் சசிகலாவினுடைய பரோல் காலம் நிறைவடைவதால் நாளை அவர் மீண்டும் சிறைக்குச் செல்லவேண்டும். இந்த நிலையில் சசிகலா தரப்பு பரோல் காலத்தை நீடிக்கும் ஆலோசனையினை மேற்கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது.

அதனால் நாளை அவர் மீண்டும் சிறைக்கு செல்வாரா’? அல்லது பரோல் நாட்களை அதிகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவாரா என்ற கேள்வி அரசியல் அவதானிகளிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)