Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காஷ்மீரில் திடீர் தாக்குதல்! – படையினர் இருவர் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 06:45 GMT, Oct 11, 2017 | Published: 04:52 GMT, Oct 11, 2017 |
0 Comments
1237
icon_com
This post was written by : Puvanes
attack001

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், இந்திய இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் இரு படையினர் உயிரிழந்துள்ளனா்.

இன்று அதிகாலை பந்திபுராவில் உள்ள ஹஜின் பகுதியில் எட்டு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டபோது, பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்பு படையினர் மீது திடீரென துப்பாக்கித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து படையினரும் பதில் தாக்குதல் மேற்கொண்டு இரு தரப்பிற்கும் மோதல் வலுப்பெற்ற போது படையினர் இருவர் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளனர்.

மறுமுனையில் பயங்கரவாதிகள் தரப்பில் இருவரையும் படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாகவும், தற்போது குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)