Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செம்மரக் கடத்தல் குற்றச்சாட்டில் ஆந்திராவில் எட்டுபேர் கைது

In இந்தியா
Updated: 07:15 GMT, Oct 11, 2017 | Published: 07:15 GMT, Oct 11, 2017 |
0 Comments
1156
This post was written by : Elakkiya
201710111126579426_8-people-arrested-for-cuttings-sandalwood-near-andhra_SECVPF

செம்மரம் கடத்திய குற்றச்சாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த எட்டுபேர் ஆந்திர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மற்றும் சேஷாசல வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்துவதற்கு முயற்சித்த வேளையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடப்பா மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட அனைவரும் திருபத்தூரைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்திலிருந்து சுமார் 5 லட்சத்து 76 ஆயிரம் ரூபா பெறுமதியான 14 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg