Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னிந்தியப் படங்களில் நடிக்கமாட்டேன் : ராதிகா ஆப்தே

In சினிமா
Updated: 08:56 GMT, Oct 11, 2017 | Published: 08:08 GMT, Oct 11, 2017 |
0 Comments
1360
icon_com
This post was written by : Ravivarman
rathika-680x365

தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் தவறாக நடக்க முற்பட்டதால் தமிழில் நடிப்பதற்கு மறுத்துள்ளதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்மையில் அவர் ஊடகமொன்றிற்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொதுவாகத் திரைத்துறையில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் நடிகைகளிடம் தவறாக நடக்க முற்படும் பழக்கம் உள்ளது. தென்னிந்திய திரைத்துறையிலும் அவ்வாறான நிலை உள்ளது.

ஒரு முறை ஒரு தயாரிப்பாளரைச் சந்தித்தேன். அவருடன் படம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென என்னிடம் தவறாக நடக்க முற்பட்டார்.

அதிர்ச்சியடைந்த நான், அவரை உதாசீனப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டேன். இதனால் எனக்கு தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வரவில்லை என நினைக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, தமிழில் டோனி, வெற்றிச் செல்வன், கபாலி ஆகிய படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg