Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சுவையான கொத்து புட்டு

In
Published: 11:57 GMT, Oct 11, 2017 |
0 Comments
2551
icon_com
This post was written by : Anojkiyan
koth

தேவையான பொருட்கள்:

தேங்காய் கலந்த அரிசி மாவு புட்டு – ஒரு துண்டு (அல்லது) ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
மெல்லியதாக நறுக்கிய இஞ்சி – சிறிது
பச்சை மிளகாய் – 2
குழம்பு கிரேவி – அரை கப்
உப்பு – சிறிது

தாளிக்க:
எண்ணெய், கடுகு
மிளகாய் வற்றல் – ஒன்று
கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

முதலில் வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். அரிசி மாவு புட்டை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும். (உப்பு சிறிது சேர்த்தால் போதும்).

வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்து விட்டு உதிர்த்து வைத்துள்ள புட்டைச் சேர்த்துக் கலந்துவிடவும். அத்துடன் குழம்பை சேர்க்கவும். அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு கிளறிவிட்டு இறக்கவும். சுவையான கொத்து புட்டு தயார். கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)