Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொதல் செய்யும் முறை!

In
Updated: 12:14 GMT, Oct 11, 2017 | Published: 12:14 GMT, Oct 11, 2017 |
0 Comments
26132
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள்

தேங்காய்பால் – 2 கப்
சிவப்பு அரிசிமா – அரை கப்
தண்ணீர் – 1 அரை கப்
சர்க்கரை, கித்துள், பிரவுண் நிற சீனி – 400 கிராம் (அல்லது தேவையான இனிப்புக்கு ஏற்ப)
வறுத்த உடைத்த பயறு – ஒரு கைப்பிடி
கஜு (முந்திரி) – 25
பட்டர் – ஒரு தேக்கரண்டி
வெனிலா, ஏலக்காய் – சிறிது

செய்முறை

கித்துள், சர்க்கரையை சிறிய துண்டுகளாக நொருக்கவும். பிரவுண் நிற சீனியாக இருந்தால் அப்படியே போடலாம். முந்திரியை இரண்டிரண்டாக உடைத்து பட்டரில் வறுத்து எடுக்கவும். பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் தேங்காய்ப்பால், சிவப்பு அரிசிமா, தண்ணீர், சர்க்கரை, கித்துள், பிரவுண் நிற சீனி, பயறு எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். இந்த கலவையை சிறிது அதிகமான தீயில் வைத்து எண்ணெய் பிறக்கும் வரை கிளறவும்.

எண்ணெய் பிரிந்து கலவை சட்டியில் ஒட்டாத பதம் வந்ததும், ஏலக்காய், வெனிலா, கஜு சேர்த்து கிளறி ஒரு தட்டில் கொட்டி சமமாக பரப்பி விட்டு ஆற விடவும். சுவையான தொதல் தயார். ஆறியதும் துண்டுகளாக்கி பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg