Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரஷ்யப் பிச்சைக்காரனும்! சுஷ்மாவின் கரிசனையும்!!

In இந்தியா
Updated: 15:40 GMT, Oct 11, 2017 | Published: 15:00 GMT, Oct 11, 2017 |
0 Comments
1197
icon_com
This post was written by : elayathambi
Russian_kancheepuram_PTI

தமிழக ஆலயத்தில் பிச்சை எடுத்த  24 வயதுடைய ரஷ்ய சுற்றுலாப் பயணியான பெர்ன் கோவ் என்பவருக்கான  அனைத்து உதவிகளையும் தருவதற்குத் தாம் தயார் என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா இன்று தெரிவித்துள்ளார்.

தமிழக ஆலயங்களை பார்க்க கடந்த மாதம் 24 ஆம் திகதி  இந்தியா வந்த பெர்ன் கோவ், கடந்த திங்களன்று காஞ்சிபுரம் வந்துள்ளார். கையில் இருந்த காசு முழுவதும் முடிந்த நிலையில், ஏடிஎம் மூலம் பணம் பெற அவர் முயற்சித்துள்ளார். தனது வங்கி அட்டையின் இரகசிய இலக்கத்தை மறந்த நிலையில், அவரின் தவறான பதிவுகளால் அவரது வங்கி அட்டையை, ஏடிஎம் இயந்திரம் முழுங்கியிருக்கிறது.

வேறு வழியின்றி பக்கத்தில் இருந்த காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் உறங்கியுள்ளார். மறு நாள் காலை கோயில் வாசலில் இருந்த பிச்சைக்காரர்களைப் பார்த்ததும், அதே பாணியில் பிச்சை எடுக்க அவர் முடிவு செய்திருக்கிறார். தனது தொப்பியை கையில் ஏந்தி பிச்சை எடுத்த இவரை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். சிலர் இதனை காவல் துறைக்கு அறிவித்துள்ளனர்.

செய்தி அறிந்த சிவகாஞ்சி காவல் தூறை  தமது  காவல் நிலையத்திற்கு இவரை அழைத்துச் சென்றுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த இவரிடம் அனைத்து பயண ஆவணங்களும் முறையே இருந்துள்ளன.  இவரின் நிலையைப் புரிந்த குறித்த காவல் துறை இவருக்கு இந்திய ரூபாய் 500 ஐ கொடுத்து, சென்னைக்கு அனுப்பி உள்ளது.

இந்த விவகாரம் ஊடகங்கள் மூலம் பரவி வெளியுறவு அமைச்சு வரை சென்றுள்ளது. இதை அறிந்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், `ரஷ்யா எங்கள் பால்ய நண்பன்,  எமது சென்னை அலுவலகம் உங்களுக்கான அனைது உதவிகளையும் செய்யும்` என தனது ட்வீட்டர் செய்தியில்  தெரிவித்துள்ளார்.

சுஷ்மா சுவராஜின் இந்தச் செய்தி தமிழக ஆலயங்களில் பிச்சை எடுக்கும் யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை என்பது வேறு கதை.

 

sushma
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)