Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய – தமிழக அரசுகளை குற்றம் சாட்டும் ஸ்டாலின்

In இந்தியா
Published: 04:21 GMT, Oct 12, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Kemasiya
1492520606

அண்ணாவின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் சூழ்நிலை பா.ஜ.க.வுக்கும் வந்துவிட்டது. அண்ணா இன்று இருந்திருந்தால் அவர் பா.ஜ.க.வில் சேர்ந்திருப்பார் என முரளிதரராவ் தெரிவித்திருந்தார். அவர்களின் மனதில் அண்ணாவை வைத்து, இன்றைக்கும் நினைவுபடுத்தியதற்காக தி.மு.க. சார்பில்  எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தி.ம.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களுக்கு அளித்த செவ்வியின் போதே தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

ஆனால், கடந்த மூன்றரை ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. ஆட்சி எதையுமே செய்யவில்லை. இந்த ஆட்சியால் மக்களுக்கு எந்தவொரு பயனுமே கிடைக்கவில்லை. எனவேதான், அதையெல்லாம் திசை திருப்பும் வகையில் இப்படிப்பட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் என பல தரப்பினரும் இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர்ந்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூட செய்திகள் வந்துள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg