Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேச்சுவார்த்தையில் தோல்வி! – வீதிகளில் குவியும் வாகனங்கள் (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 13:30 GMT, Oct 12, 2017 | Published: 05:24 GMT, Oct 12, 2017 |
0 Comments
1290
icon_com
This post was written by : Elakkiya

நேற்றிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத வேலைநிறுத்தம் தொடர்பில் தீர்வு எட்டப்படுவதற்காக இன்று மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

திடீரென முன்னெடுக்கப்பட்ட குறித்த புகையிரத வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போது புகையிரதப்பயணிகள் அதிகமாக பேருந்துப் பயணங்களில் ஈடுபட்டுவருகின்ற காரணத்தினாலும், தனியார் வாகனங்கள் அதிகளவில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளதாலும் பாரிய வாகன நெரிசல்களுக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.

மேலும், புகையிரத போராட்டத்தின் காரணமாக அன்றாட நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தால் சிரமங்களை எதிர்கொள்ளும் பயணிகள்

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சாரதிகள் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் சாரதிகள் மற்றும் உதவியாளர்களை பணிக்கு இணைத்துக் கொள்ளும் நடைமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (வியாழக்கிழமை) இரவு முதல் ரயில் சாரதிகள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக கொழும்பு, மட்டக்களப்பு, மலையகம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ரயில் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.  இதனால் காலை வேளையில் பணிகளுக்கு செல்பவர்கள், பாடசாலை மாணவர்கள் என பெருந்தொகையான பயணிகள் சிரமங்களுக்கு உள்ளானதுடன் பேரூந்துகளில் தமது பயணங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இதனால் பேரூந்துகளில் அதிக நெரிசல் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

இவ்வாறிருக்க முடிந்தவரை ரயில் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

DSC01281DSC01280S5030011S5030012S5030024

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg