Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காந்தி ஒன்றும் கடவுள் இல்லை: பீகார் முதல்வர் அறிவுரை

In இந்தியா
Updated: 07:48 GMT, Oct 12, 2017 | Published: 07:48 GMT, Oct 12, 2017 |
0 Comments
1163
This post was written by : Kemasiya

‘மகாத்மா காந்தி ஒன்றும் கடவுள் இல்லை’ என பீகார் முதல்வர் பாடசாலை மாணவர்களிடம் சத்தியாக்கிரகம் குறித்து பேசும் போது அறிவுரை வழங்கியுள்ளார்.

காந்தியின் சத்தியாக்கிரக போராட்டத்தை மாணவர்களுக்கு கதையாக எடுத்து சொல்லும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) ‘ஞான் பவன்’ அலுவலகத்தில்  800 மாணவர்கள் பங்கேற்ற சத்தியாக்கிரக கூட்டம் இடம்பெற்றது. இதன் போது மாணவர்கள் மத்தியில் சத்தியாக்கிரகம் தொடர்பில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் கூறுகையில்,

‘காந்தி ஒன்றும் கடவுள் கிடையாது. அவர் ஒரு மனிதர் . அவர் காட்டிய வழியைத்தான் நாம் பின்பற்ற வேண்டுமே தவிர வெறுமனே சிலைகளை அமைத்துக் கொண்டிருக்க கூடாது.

தன்னுடைய வாழ்க்கை முழுதும் அனைத்து போராட்டங்களிலும் அஹிம்சையை கடைப்பிடித்தவர் மகாத்மா காந்தி. ஆனால் அவரே வன்முறைக்கு பலியாகி உயிர் நீத்தமை மிகவும் வினோதமான செயல். காந்தி வேண்டுமானால் கொல்லப்பட்டிருக்கலாம் ஆனால் அவருடைய கொள்கைகளை கொல்ல முடியாது. அவை என்றும் இந்தியாவிலும் உலகிலும் பிற பகுதிகளிலும் உயிர்ப்புடன் இருக்கும்’. என 800 மாணவர்கள் பங்கேற்ற சத்தியாக்கிரகம் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg