Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலமைச்சரின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு பணிகள் ஆரம்பம்

In இந்தியா
Published: 08:10 GMT, Oct 12, 2017 |
0 Comments
1113
This post was written by : Kemasiya
dfefe

ஒவ்வொரு மாவட்ட ஆளுநர்களும் டெங்கு ஒழிப்பு பணிகளில் 15 நாட்கள் தொடர்ந்தும் ஈடுபட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பணித்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு தொடர்பில் ஆய்வு கூட்டம் ஒன்று இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், டெங்கு ஒழிப்பு தொடர்பில் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவை கீழ்வருமாறு,

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆளுநர், மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில், அடுத்த 15 நாட்களுக்கு அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள நீர் தேங்கும் இடங்கள், குப்பைகூளங்கள், கட்டுமானப் பகுதிகள் ஆகியவற்றை முழுமையாக துப்புரப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இப் பணிகளை ஆய்வு செய்யவும் அவதானிக்கவும் சிறப்பு குழு அமைக்கப்படும். இக்குழு உறுப்பினர்கள் தினந்தோறும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கூறிய நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறுவதை கண்காணித்து உறுதி செய்து தினசரி அறிக்கை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்ப வேண்டும்.

அனைத்து இடங்களிலும் கூடுதல் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். போன்ற பல்வேறு விடயங்கள் முக்கியப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் டெங்கு ஒழிப்பு தொடர்பான பணிகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg