Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அரசியல் மறுசீரமைப்பு- தெளிவான விளக்கங்களுக்காக செயலமர்வுகள் ஏற்பாடு

In இலங்கை
Updated: 08:22 GMT, Oct 12, 2017 | Published: 08:21 GMT, Oct 12, 2017 |
0 Comments
1055
icon_com
This post was written by : Elakkiya
Rasaiya Manoharan

‘அரசியல் மறுசீரமைப்பு’ தொடர்பான தெளிவான விளக்கம் அவசியம் என தேசிய சமாதானப் பேரவையின் சர்வமத பேரவைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) கருத்து வெளியிட்ட அவர், ‘மாவட்டத்திலுள்ள சர்வமதங்களை சேர்ந்த பிரதிநிதிகள், மக்களோடு எந்நேரமும் ஒன்றித்து இயங்கி வரும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அரசியலமைப்பின் மறுசீரமைப்பு தொடர்பான முழுமையான தெளிவை ஏற்படுத்தும் வகையில் ‘அரசியல் மறுசீரமைப்பு’ எனும் தொனிப்பொருளிலான செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேசிய சமாதானப் பேரவையால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த கலந்துரையாடல் திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்களுக்கு புதிய அரசியல் மறுசீரமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் இடம்பெறுகின்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமகால அரசியல் அறிவு இல்லாதவர்களாகவும் நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அக்கறை இல்லாதவர்களாகவும் நாம் இருக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு முரண்பாடு தோன்றும் என்று சுட்டிக்காட்டிய அவர், முரண்பாடற்ற, நீண்ட, நிலைத்து நிற்கும் சமாதானத்திற்கு பல்லின இலங்கையர்களுக்கு இடையில் கலந்துரையாடல்களும், விவாதங்களும், இணக்கத்துடனான முடிவுகளும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

1 (2)
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)