Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துணை முதல்வர் பிரதமருடன் என்ன பேசினார்?

In இந்தியா
Published: 08:30 GMT, Oct 12, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Kemasiya

‘முதல்வர் பழனிச்சாமிக்கும் எனக்கு எவ்வித மன வருத்தமும் இல்லை. கட்சியிலும் ஆட்சியிலும் எங்கள் அணியினர் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுவது பொய்’. என துணை முதல்வர் பிரதமரிடம் கூறியுள்ளார்.

டெல்லி புறப்பட்ட துணை முதல்வர் பன்னீர்ச்செல்வம் இன்று (வியாழக்கிழமை) காலை பிரதமர் மேடியை சந்தித்து கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமருடன் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,

‘பிரதமர் மோடியுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. தமிழக வளர்ச்சி குறித்து கோரிக்கை மனு பிரதமரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

மின்சார தேவைக்கான நிலக்கரி பற்றாக்குறை குறித்து முதல்வர் பழனிசாமி வழங்கிய கடிதத்தை பிரதமரிடம் வழங்கினேன். மற்றும் உடனடியாக தமிழகத்துக்கு தேவைப்படும் நிலக்கரியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பான தடுப்பு பணிகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தோம். டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஓரளவு வெற்றிபெற்றுள்ளது. மத்திய அரசின் மருத்துவக் குழு தமிழகத்திற்கும் வரும்’ என பிரதமர் உறுதியளித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg