Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக அப்துல் றஸ்ஸாக் நியமனம்

In இலங்கை
Updated: 09:42 GMT, Oct 12, 2017 | Published: 09:41 GMT, Oct 12, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : Elakkiya
Rassak - 098

ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ். அப்துல் றஸ்ஸாக், சாய்ந்தமருது, கல்முனை பிரதேச முஸ்லிம் மற்றும் தமிழ் செயலாளர் பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசங்களுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் செயற்பட்டு வருகின்ற நிலையில் சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய அபிவிருத்தித் திட்டத்துக்கு அமைவாக குறித்த பிரதேசங்களுக்கான அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் போன்ற விடயங்களில் இணைத்தலைவர் அவதானம் செலுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg