Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோடி ஆட்சி இவ்வாறே செல்லுமானால் நிச்சயம் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்- வைகோ எச்சரிக்கை

In இந்தியா
Updated: 12:29 GMT, Oct 12, 2017 | Published: 08:54 GMT, Oct 12, 2017 |
0 Comments
1135
icon_com
This post was written by : Kemasiya
vaiko

மோடி அரசின் ஆட்சி எதேச்சதிகார மனப்பான்மையுடன் செயல்படுமானால் இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும் என, ம.தி.மு.க. தலைவர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“2015 ஆம் ஆண்டில் 8.6 வீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம், கடந்த ஆண்டு 7.1 வீதமாக சரிந்தது. நடப்பு ஆண்டில், முதல் காலாண்டில் 5.7 வீதமாக பெரும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றது. பன்னாட்டுச் செலாவணி நிதியம் மற்றும் உலக வங்கி போன்றவை இந்தியப் பொருளாதார வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டி இருக்கின்றன. அதில் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. போன்றவை பொருளாதார சரிவிற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி நிதி ஆயோக் உறுப்பினர் “பிபேக் தேப்ராய்” தலைமையில் பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்தார். இக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் புது டெல்லியில் நேற்று ஒக்டோபர் 11 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிபேக் தேப்ராய், பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது என்று கூறி உள்ளமை மீட்டு பார்க்கப்பட வேண்டிய விடயம்.

இவ்வாறு எதேச்சதிகார மனப்பான்மையுடன் ஆட்சி நிர்வாகம் செயல்படுமானால் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும்” என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்வதாக குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg