Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லாட்சியின் பிரதியமைச்சருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

In இலங்கை
Updated: 10:06 GMT, Oct 12, 2017 | Published: 09:19 GMT, Oct 12, 2017 |
0 Comments
1199
icon_com
This post was written by : Puvanes
ranjam001

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவரும், ரஞ்சன் ராமநாயக்க சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகளுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தமை தொடர்பில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுவில், இலங்கையில் பெரும்பாலான சட்டத்தரணிகள் ஊழலில் ஈடுபடுபவர்கள் என ரஞ்சன் ராமநாயக்க அண்மையில், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டதாகவும், இந்த கருத்தானது சட்டம் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைத் தன்மையை சீர்குலைக்கும் செயல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து குறித்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே உயர் நீதிமன்றம், ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, ஊழலில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகளின் பெயர்களை ரஞ்சன் ராமநாயக்க வெளியிட வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg