இரு தினங்களுக்கு தொடர் மழை: வானிலை மையம் அறிவித்தல்
This post was written by : Kemasiya

அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் முழுவதும் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தல் விடுத்துள்ளது. வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் ஊடகவியலாளர்களுக்கு தகவல் வழங்கிய போதே இதனை உறுதி செய்துள்ளார்.
மத்திய கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலேட்டு சுழற்சி நிலவுகிறது. எனவே அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். மேலும் மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் மிதமான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.