Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அறிவுறுத்தலை மீறி மீன்பிடித்த ஐவர் கைது

In இலங்கை
Published: 09:35 GMT, Oct 12, 2017 |
0 Comments
1159
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், ராமேஸ்வரம் மீனவர்கள் ஐவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவுக்கும் தலைமன்னாருக்கும் இடையில் நேற்று (புதன்கிழமை) இரவு இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட போது, அங்கிருந்து விலகிச் செல்லுமாறு கடற்படையினர் எச்சரித்துள்ளனர். எனினும், மீனவர்கள் தொடர்ந்தும் மீன்பிடியில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இவர்கள் யாழ். கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்கதையாக நீளும் நிலையில், இதுகுறித்து இந்திய மத்திய அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென ராமேஸ்வரம் மீனவ சங்க செயலாளர் கலைக்கூடம் சகாயம் தெரிவித்துள்ளார். அத்தோடு, நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையால் கைதுசெய்யப்படும் மீனவர்கள், இரு நாட்டு சிறைகளிலும் வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை இரு நாட்டு பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் புதுடெல்லியில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)