Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கச்சதீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

In இந்தியா
Published: 10:00 GMT, Oct 12, 2017 |
0 Comments
1163
icon_com
This post was written by : Kemasiya

கச்சதீவு அருகே அனுமதி பெற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு மீனவர்களையும், படகுகளையும், இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (புதன்கிழமை) காலை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 600க்கும் மேற்ப்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்களை இரவு முழுவதும் மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை அச்சுறுத்தியதால், மீனவர்கள் வேறு பகுதிகளுக்குச் சென்று மீன்பிடித்துள்ளனர்.

இதனையடுத்து இன்று அதிகாலை மீன்பிடித்துவிட்டு கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே கரை திரும்பும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நூற்றுக்கும் மேற்ப்பட்ட படகுகளிலிருந்த பல இலட்சம் மதிப்பிலான மீன்களையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியதோடு, கற்கள் மற்றும் உருட்டுக்கட்டைகளால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் படகு ஒன்றிற்கு தலா ரூ 30 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

இதையடுத்து தமிழ்நாடு விசைபடகு மீனவர் சங்க செயலாளர் சேசுராஜ் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு வருடங்களாக 192 படகுகளை மீள முடியாமல் அவதியுற்று வருகின்றோம், இதில் 42 படகுகளை விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டும் இன்றுவரை முழுமையாக விடுவிக்கப்படாமல் உள்ள நிலையில், தற்போது மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களையும் படகுகளையும் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதென தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)