Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமைதியாக வந்து சேர்ந்தார் பிரதமர்! – அவசரமாக வருகின்றார் மஹிந்த!

In இலங்கை
Updated: 10:04 GMT, Oct 12, 2017 | Published: 10:03 GMT, Oct 12, 2017 |
0 Comments
5222
icon_com
This post was written by : Puvanes
ranil001

பின்லாந்து நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி பின்லாந்திற்கு பிரதமர் உட்பட முக்கியஸ்தர்களின் குழு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தது.

குறித்த நாட்டின் உயர்மட்ட பிரதிநிகளைச் சந்தித்த பிரதமரை உள்ளடக்கிய குழு, இரு தரப்பு விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் இன்று மீண்டும் நாடு நிரும்பியுள்ளனர்.

இதேவேளை, ஜப்பான் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் அவசரமாக நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி போராட்டம் செய்த குற்றத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட விடயம் தொடர்பில் ஜப்பான் சென்றுள்ள மஹிந்த இதனை அறிந்து, நாடு திரும்பவுள்ளதாக அவரின் செயலாளர் உதித் லொக்கு பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட நாமல் உட்பட்டோர் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுப்பதற்காகவே மஹிந்த அவசரமாக நாடு திரும்புவதாக குறிப்பிடப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)