Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

துணை முதல்வர் பன்னீர்ச்செல்வம் மீதான வழக்கு பிற்போடப்பட்டது

In இந்தியா
Updated: 12:29 GMT, Oct 12, 2017 | Published: 10:25 GMT, Oct 12, 2017 |
0 Comments
1105
icon_com
This post was written by : Kemasiya
pannirselvam-a

கெறாடா உத்தரவை மீறி வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தி.மு.க தொடர்ந்த வழக்கு விசாரணையில் சட்டப்பேரவை செயலர், 11 சட்டமன்ற உறுப்பினர்கள் அவகாசம் கேட்டதையடுத்து, விசாரணையை ஒக்டோபர் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று (வியாழக்கிழமை) நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவை செயலாளர் சார்பில் ஆஜரான தமிழக அரசு தலைமை சட்டத்தரணி விஜய் நாராயணன், தங்களின் தரப்பு பதில் அளிக்க மூன்று வாரங்கள் தேவை, எனவே விசாரணை நவம்பர் மாதம் 2 ஆம் திகதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு திமுக சார்பில் ஆஜரான முத்த சட்டத்தரணி கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே பதிலளிக்க உத்தரவிடபட்டுள்ளது. எனவே விரைவாக பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் என கூறினார்.

ஆனால் அதை ஏற்க்கமறுத்த நீதிபதி, இந்த மனு குறித்து பதில் அளிக்கும்படி சபாநாயகர், சட்டசபைச் செயலாளர் ஆகியோருக்கு, மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அவர்கள் தங்கள் பதில் மனுவை ஒக்டோபர் 27 ஆம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)