Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரி தாக்க முயன்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் முறைப்பாடு

In இலங்கை
Updated: 10:36 GMT, Oct 12, 2017 | Published: 10:33 GMT, Oct 12, 2017 |
0 Comments
1184
icon_com
This post was written by : Elakkiya
DSC05169

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் தன்னை தாக்குவதற்கு முற்பட்டதாகவும் தடுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள யோகேஸ்வரன் அதன்பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, “காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் என். விமலராஜ் தனது மனைவுடன் நேற்று புதன்கிழமை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.

புதன்கிழமை என்பது பொது மக்களுக்கான அலுவல்களை மேற்கொள்ளும் அலுவலக தினம் ஆகையால் தனது அலுவலகத்தில் இருக்க வேண்டிய அவர் அலவலக வாகனத்திலேயே மனைவி சகிதம் எனது அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

ஏறாவூர் புன்னைக்குடா பகுதியில் அபகரிக்கப்பட்ட காணிகளை காணி சீர்திருத்த ஆணைக்குழு கைப்பற்றியதாகவும் இதில் அரசியல்வாதிகள் எதுவும் செய்யவில்லை என்றும் அரசியல்வாதிகளை மிகவும் மோசமாக விமர்சித்துப் பேசினார். அவருடன் சேர்ந்து அவரது மனைவியும் கடுமையாக இழித்துரைத்தார்.

இதனையடுத்து இருவரையும் எனது அலுவலகத்திலிருந்து வெளியேறுமாறு கூறினேன். இதன்போதே என்னைத் தாக்குவதற்கு அவர் முற்பட்டார். எனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை தடுக்க முற்பட்டபோது பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்கினார்.

இந்த சம்பவத்தை அடுத்து பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்ட பின்னர் விமல்ராஜ் என்னிடம் மன்னிப்பு கோரினார். இனிவரும் காலத்தில் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தி மனிதாபிமான அடிப்படையில் நான் அவருக்கு மன்னிப்பு வழங்கினேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்க பொலிஸார் தன்னைத் தாக்கியதாக விமல்ராஜ் ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளார் என்றும் இதனையடுத்து இன்று மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg