Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

புண்ணியம் தேடிச் சென்றார் பிரதமர்! – நாட்டு மக்களுக்கு ஒரு எச்சரிக்கை

In இலங்கை
Published: 11:15 GMT, Oct 12, 2017 |
0 Comments
3021
icon_com
This post was written by : Puvanes
ranil_wimal001

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எப்போது விசாரணை நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், மத்திய வங்கி மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன் மஹேந்திரன் எனக்கு ஒன்றும் தெரியாது பிரதமரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் பிரதமரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டாலே மோசடிகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும் என விமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நாட்டை துண்டாடும் செயற்பாடுகளை முன்னெடுத்து முறைகேடான ஆட்சியினை பிரதமர் நடத்தி வருகின்றார் எனக் குறிப்பிட்ட விமல், அதனை சரி செய்து கொள்வதற்காக புண்ணியங்களைத் தேடி ரணில் பின்லாந்துக்கு சென்று வந்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த வருடம் முடிவு பெறுவதற்குள் எட்கா ஒப்பந்தத்தை செயற்படுத்தல், நாட்டை துண்டாடும் அரசியலமைப்பை கொண்டு வருதல், அவசரமாக பல கொள்ளைகளில் ஈடுபட்டு கொள்ளுதல் போன்ற விடயங்களைச் செயற்படுத்த அரசு முயற்சி செய்கின்றது என்ற ஓர் ஆபத்து எச்சரிக்கையினையும் நாட்டு மக்களுக்கு நாம் விடுக்கின்றோம் எனவும் விமல் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்த வருடம் மிக முக்கியமான வருடமாகும், அதனால் மக்கள் தமது கடும் எதிர்ப்பினை அரசாங்கத்திற்கு எதிராக வெளிப்படுத்தி, அதனை வீட்டுக்கு அனுப்பும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் விமல் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)