Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான தினைப் பணியாரம்!

In
Published: 11:55 GMT, Oct 12, 2017 |
0 Comments
1376
icon_com
This post was written by : Anojkiyan
thin

தேவையான பொருட்கள்

தினையரிசி – முக்கால் கப்
பச்சரிசி – கால் கப்
தேங்காய் துருவல் – அரை கப்
வாழைப்பழம் – ஒன்று
வெல்லம் – தேவையான அளவு
சோடா உப்பு – சிறிது
நெய் – தேவையான அளவு

செய்முறை

தினையரிசி, பச்சரிசி இரண்டையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும் ஊறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு அவற்றோடு தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்து எடுத்த மாவை ஐந்து மணி நேரம் புளிக்க விடவும். மாவு புளித்ததும் அதில் வாழைப்பழம், வெல்லம், சோடா உப்பு சேர்த்து பிசையவும்.

குழிப்பணியாரக்கல்லில் சிறிது நெய் விட்டு மாவை ஊற்றவும். சிறிதளவு நெய் போதுமானது. வெந்ததும் திருப்பி விட்டு மேலும் சிறிது நேரம் வேக விட்டு எடுத்து விடவும். சுவையான தினைப் பணியாரம் ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg