Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுகீரை குணுக்கு

In
Updated: 12:01 GMT, Oct 12, 2017 | Published: 12:01 GMT, Oct 12, 2017 |
0 Comments
1272
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு – ஒரு கப்
துவரம்பருப்பு – ஒரு கப்
சிறுகீரை – ஒரு கப்
வெங்காயம் – 2
காய்ந்த மிளகாய் – 4
சோம்பு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை

செய்முறை

பருப்புடன் சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். கீரை, கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கீரையை போட்டு வதக்கவும். அரைத்த பருப்புடன் வதக்கிய கீரை, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து பிசைந்து கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெயை காய வைத்து சிறு சிறு குணுக்குகளாக கிள்ளி போடவும். மொறுமொறுவென்று பொரிந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும். வடையாகவும் தட்டி போடலாம். வையான சிறுகீரை குணுக்கு ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg