Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தார் ஐ.நா. விசேட அறிக்கையாளர்!

In இலங்கை
Published: 14:11 GMT, Oct 12, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Vithushagan
20171012_142317

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு தீர்வு வேண்டி கிளிநொச்சி – கந்தசாமி ஆலயத்தின் முன்பாக 235ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் இன்று (வியாழக்கிழமை)  சந்தித்துள்ளார்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாம் அறிந்து கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை பெற்றுத் தருமாறு பப்லோ டி கிரிப்பிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கருத்து தெரிவிக்கும் போது, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான விடயங்களை பப்லோ டி கிரிப்பிடம் தாம் முன்வைத்ததாக குறிப்பிட்டதோடு, அதற்கு அவர் மக்களின் நிலைமைகளை புரிந்து கொள்ள முடிகின்றதாக பதிலளித்ததாகவும்  குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இவ்விடயங்கள் தொடர்பில் தெரியப்படுத்த வேண்டிய இடங்களுக்கு தாம் தெரியப்படுத்துவதாக பப்லோ டி கிரிப் கூறி சென்றதாகவும்  போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதி ஜனாதிபதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிய கிடைத்துள்ளதாகவும், ஏற்கனவே ஜனாதிபதியால் வழங்கப்பட்ட வாக்குறுதி 4 மாதங்களை கடந்தும் நிறைவேற்றப்படாத நிலை தமக்கு கவலை அளிப்பதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சிக்கு வருகை தரும் ஜனாதிபதி தம்மில் சிலரை சந்தித்து பிள்ளைகள் தொடர்பில் நல்லதொரு முடிவை பெற்றுத்தர வேண்டும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

20171012_140442 20171012_142312

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg